இடம் என்று சொல்லப்படும் ஆகாயம் நிறைந்துள்ள ஒரு குடமானது எடுத்துப் செல்லப்படும்போது, அந்த குடத்தின் உள்ளேயுள்ள ஆகாயமும் கூடவே எடுத்துச் செல்லப்படுவதாகத் தோன்றினாலும், குடம் மட்டுமே போகின்றது. ஆகாயம் உடன் போவதில்லையல்லவா? இது போன்று, உடல் அசையும்போது, [உடலில் இருப்பது போலக் காணப்படும்] ஆன்மாவும் [உடலின் அசைவால் அசையாமல்] ஆகாயத்தைப் போலவே நிலைத்து நிற்கிறது.
(திரு #பகவான் #ரமண #மாமுனிவர் அருளிய 🌺🙏🏽🙇🏽♂️ ஆன்ம சாட்சாற்கார பிரகரணம் பாடல் 52க்கு திரு #சாதுஓம் #சுவாமிகளின் 🌺🙏🏽🙇🏽♂️ உரை)
தமிழர்களின் மூத்த தெய்வம் மூதேவியாம்! அவரே நமது வளத்தின் மூல வடிவமாம்!! ☺️
அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு
-- #காரைக்கால் #அம்மையார் 🌺🙏🏽🙇🏽♂️, அற்புதத் திருவந்தாதி #9
(ஆனால் - ஆகையால்)
🌷 இன்று ஆனி - நிறைமதி. காரைக்காலில் #மாங்கனித் #திருவிழா நடைபெறும்.
🌷 நாயன்மார்கள் வரிசையில், தேவார மூவர் முதற்கொண்டு அனைவரும் நின்றிருக்க, #பேயார் மட்டும் அமரும் பேறுபெற்றவர். 🙏🏽
மாவீரன் #அலெக்ஸாண்டர் @ பேட்டை தாதா அலெக்ஸு புராணம்!! 😁
புத்தி அகங்காரம் புலம்எய்த ஓங்கும்
மத்தி இதயம்தான் மறையவனும் மாலும்
நத்த அறியாது நலம்குலைய அன்னார்
மத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே
-- திரு #முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽
(திரு அண்ணாமலையாரும், அடி அண்ணாமலை திருக்கோயிலும்)
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே
-- #திருமூலர் 🌺🙏🏽🙇🏽♂️, #திருமந்திரம் #8
#பகவான் திரு #ரமண #மாமுனிவர்
திரு #தாயுமானவர்
குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்
மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்
ஓய்ந்துபரா வாக்கா முடையா னருண்மொழியை
ஆய்ந்துதாங் கேளா தவர்!
-- திரு #முருகனார் #சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽♂️ (#குருவாசகக் #கோவை #1198)
#பகவான் திரு #ரமண #மாமுனிவர்
விடுதலை (!?) அடைந்து 74 ஆண்டுகளாகியும் நம்மை விட்டகலாத அடிமைத்தனம்!!
http://samicheenan.blogspot.com/2021/06/74.html
#கெப்ளர், #நியூட்டன், #கலிலியோ, #ஐன்ஸ்டீன், #திப்பு #சுல்தான்
#வைகாசி - #பூசம் (14/06/2021) - தெய்வச் #சேக்கிழார் திருநாள் 🌺🙏🏽🙇🏽♂️
http://samicheenan.blogspot.com/2021/06/14062021.html
#பெரிய #புராணம்
#திருத்தொண்டர் புராணம்
#குன்றத்தூர்
பொய்கண்டார் காணாப் புனிதமாம் அத்துவிதம்
மெய்கண்ட நாதனடி மேவுநா ளெந்நாளோ!!
-- திரு தாயுமான சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽♂️
மெய்கண்டாரே தூய்மையான அத்துவிதத்தைக் கண்டு கூறினார். மற்றவர் கூறியதெல்லாம் மலத்துடன் கூடிய அத்துவிதமாகும். 12ம் நூற்றாண்டில் இப்பெரியார் தோன்றியிருக்காவிட்டால் பாரத தத்துவவியல் குழப்பவியலாகியிருக்கும்!!
(திரு #மெய்கண்ட #தேவ #நாயனாரின் சமாதி 🌺🙏🏽🙇🏽♂️, திருவெண்ணெய்நல்லூர்)
#சிகிரியா - பேரரசர் இராவணேசுவரரின் கோட்டை
பேரரசர் இராவணேசுவரரின் சிகிரியா கோட்டை மற்றும் அதிலுள்ள 7 அடுக்கு பாதுகாப்பு வளையங்களில் 2 அடுக்குகளைப் பற்றி விளக்குகிறார். ...
"#முத்தமிழ் #காவலர்" திரு #கிஆபெ விசுவநாதம் அவர்கள் எழுதிய "#திருக்குறள் #கட்டுரைகள்" எனும் நூலிலிருக்கும் "#மறைமொழி" எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
மறைமொழி என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை மந்திரம் என்றும், 'வேத பாஷை' என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம்! என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. 'மறைமொழி' (பரி பாஷை) என்ற பொருளில் ஆகும். ...
இன்று கண்ணில் பட்ட #விகடனின் #ஊழியம் - "#இந்தியா #கண்டுபிடிக்கப்பட்ட #கதை - 11"!!
உண்மையில் தலைப்பு எப்படியிருக்க வேண்டுமெனில்...
👊🏽 பேட்டை தாதா அலெக்சாண்டர் மாவீரனாக்கப்பட்ட கதை
👊🏽 மன்னர் புருசோத்தமனிடம் அலெக்சு தோற்ற கதை
👊🏽 மன்னருடன் நடந்த போரில் அலெக்சின் நுரையீரல் பங்க்சராகி, குணமாகாமல் புட்டுக்கொண்ட கதை ...
"#ஆச்சாரம் #பார்க்கிறவன் #காசிக்கு #போன #கதை" என்ற தலைப்பில் ஒரு கதை சமூக வலைதளங்களில் இன்று "ஹிட்" அடித்திருக்கிறது!! கதையை கீழே இணைத்துள்ளேன். இப்போது அதன் உட்பொருளைப் பார்க்கலாம் ...
I am made up of 3 ingredients:
1. Bhagavaan Thiru Ramana Maamunivar
2. Thamizh = Saivam
3. "Our ancestors way of life is the best"